Monday, January 31, 2011

ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டது

Posted by Unknown
பேஸ்புக் உருவாக்குனர் மார்க் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது பேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவு செய்தது போல செய்தி ஒன்று இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.





Let the hacking begin: If facebook needs money, instead of going to the banks, why doesn’t Facebook let its users invest in Facebook in a social way? Why not transform Facebook into a ‘social business’ the way Nobel Price winner Muhammad Yunus described it? http://bit.ly/fs6rT3 What do you think? #hackercup2011

அதாவது பேஸ்புக்கிற்கு பணம் தேவையென்றால் வங்கிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை, ஏன் பேஸ்புக் அதன் பாவனையாளர்களை அதில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் சமூக வியாபரம் போன்றதாக மாற்றக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹெக் செய்யப்பட்டு குறிப்பு பதிவுசெய்யப்பட்ட சில நேரத்திலேயே இக்குறிப்பு அகற்றப்பட்டமையானது இது ஹெக் செய்யப்பட்டமையை உறுதிசெய்வதாக இணையத்தளங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எனினும் அவ்வாறு அகற்றப்படுவதற்கு முன்னரே பலர் இப்பதிவினை வாசித்திருந்ததுடன் தங்கள் விமர்சனங்களையும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
This is a Sticky post

This will appear right below the first post. You can edit this right from the template and change it to your own post. This will appear right below the first post. You can edit this right from the template and change it to your own post.This will appear right below the first post. You can edit this right from the template and change it to your own post.

பயன் தரும் தளங்கள்..

Posted by Unknown
இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில




1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.oldversion.com

2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.picascii.com

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.3dtin.com

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி http://www.vehiclefixer.com

5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/

6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com

7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்

இணையதளமுகவரி : http://3d-pack.com

8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.artflock.com

9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com

10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.
Read More

screen shot எடுப்பதற்கான மென்பொருள்

Posted by Unknown

நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்க்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம், அதுபோல கணினியில் உள்ள படக்காட்ச்சிகளை அல்லது சில முக்கியமாக கோப்புகளை படம் பிடிக்க வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மானிட்டர் முழுவதையுமே அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ படம் பிடிக்க வேண்டியிருக்கும். இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம், அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும்.

நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும், இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும், நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து Capture பொத்தானை அழுத்தவும். உடனே இமேஜ் பைல் உருவாகிவிடும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தேவையில்லாத Capture செய்துவிட்டோம் எனில் உடனே டெலிட்டும் செய்து கொள்ள முடியும்.
Read More